மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கல்: சசிகலாவுடன் தம்பிதுரை ஆலோசனை



Feb 7, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. தற்போது சட்டசபை குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். இதனை ஏற்றுக்கொண்ட பன்னீர்செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

siragu-sasikala

இதனையடுத்து சசிகலா 9ம் தேதிக்குள் முதல்வராக பதவியேற்பார் என்ற செய்தி வெளியானது. இந்த பரபரப்பு சூழலில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடு நடைபெறுவதை அடுத்து இன்றே சசிகலா பதவியேற்க உள்ளார் என்று செய்தி வெளியானது.

ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆளுநர் சசிகலா பதவி ஏற்பது குறித்து சட்ட ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திடீரென ஆளுநர் தமிழகம் வருவது ரத்தானதால் சசிகலா பதவி ஏற்பதில் சிக்கல் உண்டாகியிருக்கிறது.

இதனால் போயஸ் கார்டனில் சசிகலாவுடன் தம்பிதுறை மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கல்: சசிகலாவுடன் தம்பிதுரை ஆலோசனை”

அதிகம் படித்தது