மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை



Feb 13, 2017

அ.தி.மு.க-வின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின் தான் கட்டாயப்படுத்தியதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறியதால் அதிமுக-வில் அதிர்வலைகள் உருவாகியுள்ளது.

Siragu o.p.s2

பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு சசிகலாவிடம் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு இன்று தலைமை செயலகம் சென்றுள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை செயலகம் செல்வதற்கு முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய பின் கே.வி.குப்பத்திற்கு சென்று தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட உள்ளார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை”

அதிகம் படித்தது