மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்



May 4, 2017

முல்லைப்பெரியாறு அணை உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி அனுமதி பெற்றது தமிழக அரசு. பின் 142 அடி உயரத்தை 152 அடி உயரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Siragu Supreme_Court_of_India

முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்துவதற்காகவும், சீரமைப்பதற்காகவும் 7.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பணிக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை, மேலும் பராமரிப்புக்கு இடையூறு செய்வதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

எனவே இது தொடர்பாக கேரளாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் இவ்வழக்கை ஜூலை 2ம் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்”

அதிகம் படித்தது