மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி காலமானார்



Dec 7, 2016

மூத்த பத்தரிகையாளர் சோ.ராமசாமி(82) உடல்நலக்குறைவு காரணமாக அண்மைக்காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று(07.12.2016)அதிகாலை 4.40 மணிக்கு காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

siragu-cho-ramaswamy

இவர் துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர். 1970ல் துக்ளக் வார இதழை நடத்தி வந்தார். மேலும் தமிழ் சினிமாவில் 200 படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ் பெற்றுள்ளார். நான்கு படங்களை இயக்கியுள்ளார். எனவே இயக்கம், நடிப்பு மூலம் சினிமா துறையில் தடம் பதித்தவர். மேலும் ராஜ்யசபா உறுப்பினராக 1999-2005 வரை இருந்தார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சோ.ராமசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று(07.12.2016) மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி காலமானார்”

அதிகம் படித்தது