மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூன்று தொகுதிகளில் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது



Nov 17, 2016

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி போன்ற மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் 19ம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

siragu-election

இத்தேர்தல் வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெருவதையொட்டி இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அதனால் வேட்பாளர்கள் அனைவரும் ஒட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தேர்தலில் பணம் பட்டுவாடாவைத் தடுக்க போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இத்தேர்தலுக்கான கருத்துகணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கும் தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெறுவதால் இன்று மாலையுடன் பிரசாரம் முடிகிறது.

இத்தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடைபெற்று, நவம்பர் 22 ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்க உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூன்று தொகுதிகளில் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது”

அதிகம் படித்தது