மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மெரினாவில் திரண்ட கூட்டத்தைக் கொச்சைப்படுத்திய ராதா ராஜன் மீதான வழக்கு ஒத்திவைப்பு



Feb 2, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது விலங்கு நல ஆர்வலர் ராதாராஜன், “ஃப்ரீசெக்ஸ்” என்று சொன்னால் கூட ஐந்தாயிரம் பேர் மெரினாவில் கூடுவார்கள் என்று கூறினார்.

siragu radharajan

மாணவர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விலங்கு நல ஆர்வலர் ராதாராஜன் கூறியதை அடுத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், ஆதிலெட்சுமி என்ற பெண் வழக்கறிஞர் மெரினாவில் திரண்ட கூட்டத்தைக் கொச்சைப்படுத்திய ராதா ராஜன் மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் வழக்கை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மெரினாவில் திரண்ட கூட்டத்தைக் கொச்சைப்படுத்திய ராதா ராஜன் மீதான வழக்கு ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது