மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மே 1 முதல் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலையில் தினமும் மாற்றம்



Apr 28, 2017

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து வந்தது.

petrol punk

ஆனால் தங்கம், வெள்ளி போன்று தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது இந்த எண்ணெய் நிறுவனங்கள். அதன்படி மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

இதன்முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் போன்ற ஐந்து நகரங்களில் இம்மாற்றத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்நகரங்களில் உள்ள 200 பெட்ரோல் பங்குகளில் இத்திட்டத்தை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சிக்கல்களை ஆய்வு செய்து பின்நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது இந்த எண்ணெய் நிறுவனங்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மே 1 முதல் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலையில் தினமும் மாற்றம்”

அதிகம் படித்தது