மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு விவகாரம்: மம்தா தலைமையில் ஜனாதிபதியை சந்திக்க பேரணி



Nov 16, 2016

மேற்கு வங்காளம் முதல்வரும் திரிமுணால் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பல்வேறு எதிர்கட்சிகளும் கலந்து கொண்டனர்.

siragu-mamthaa

இப்பேரணி பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை இருந்தது. ஜனாதிபதியை சந்தித்து மனுவை அளித்தார் மம்தா. பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததில் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற மக்களுக்கு ஏற்படும் பல குறைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளோம். அவர் நல்ல முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் என்று மம்தா தெரிவித்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு விவகாரம்: மம்தா தலைமையில் ஜனாதிபதியை சந்திக்க பேரணி”

அதிகம் படித்தது