மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு விவகாரம்: 14வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது



Dec 5, 2016

கடந்த 8 ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது மத்திய அரசு. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்ற 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்கியது.

siragu-rajya-sabha

இக்கூட்டம் துவங்கிய நாள் முதல் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாய் நோட்டு செல்லாது குறித்து பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர் எதிர்கட்சிகள்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் துவங்கியது. இக்கூட்டம் துவங்கி பிரதமர் இரண்டு நாட்களே வந்த நிலையில் எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து பிரதமர் விவாதிக்க வேண்டும் என்றும், எதிர்கட்சிகள் குறித்து தவறாக பேசிவரும் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவையின் நடுவில் வந்து அமளியில் ஈடுபட்டனர் எதிர்கட்சிகள். இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு விவகாரம்: 14வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது”

அதிகம் படித்தது