மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லாரி வேலைநிறுத்தம்: மார்ச் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்



Mar 18, 2017

தமிழகத்தில் 41 சுங்கச்சாவடிகள் உட்பட இந்தியாவில் மொத்தம் 363 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் 117 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னும் வரி வசூல் நடைபெறுகிறது.

Siragu lorry-strike

மேலும் தமிழக அரசு வாட் வரியை உயர்த்தியதால், இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் தமிழகத்தில் டீசல் நிரப்பாமல் வெளிமாநிலத்தில் நிரப்பபடுகிறது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

உயர்த்தப்பட்ட காப்பீடு கட்டணம், வாகன பதிவு கட்டணம், டீசல் மீது வாட் வரி ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வரும் மார்ச் 30 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் லாரி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “லாரி வேலைநிறுத்தம்: மார்ச் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்”

அதிகம் படித்தது