மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு



Dec 2, 2016

இன்று அதிகாலை வங்கக்கடலில் உருவான நாடா புயல் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது. இப்புயலால் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இப்புயலால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

siragu-heavy-rain

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதியில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள்(டிசம்பர் 4) உருவாகும் எனவும், இதன் நகரும் திசை மற்றும் பலம் ஆகியவற்றைப் பொறுத்து மழை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு”

அதிகம் படித்தது