மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கக்கடலில் வார்தா புயல்: அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாக்குகிறது



Dec 8, 2016

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது இரண்டு நாட்களில் புயலாக மாறுகிறது. இப்புயலுக்கு வார்தா என பெயரிட்டுள்ளனர். இப்புயல் நாளை(09.12.16) அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாக்குகிறது. இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் 25 செ.மீ மழையும், 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

siragu-storm

இப்புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலச்சரிவும் ஏற்படக்கூடும். இதனையடுத்து இப்புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே டிசம்பர் 11, 12ம் தேதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கடக்கும் பட்சத்தில் சென்னைக்கு 11, 12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யலாம்.

கரையைக் கடக்கும் நேரத்தில் 100 லிருந்து 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இப்புயலின் பாதை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கக்கடலில் வார்தா புயல்: அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாக்குகிறது”

அதிகம் படித்தது