மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வருங்கால வைப்பு நிதியை எடுக்க நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சலுகை



Apr 27, 2017

இதுவரை தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை எடுப்பதற்கு நிறுவன உரிமையாளரின் ஒப்புதலும், மருத்துவரின் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தது.

Siragu Provident-Fund-PF

ஆனால் தற்போது மருத்துவ நோய்களுக்காக வருங்கால வைப்பு நிதியை பெற சுயமாக ஒரு சான்றிதழை சமர்ப்பித்தாலே பெறலாம் என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது உள்ளிட்ட பெரிய நோய்களுக்கான சிகிச்சை, டிபி, தொழுநோய், வாதம், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் கேன்சர் உள்ளிட்ட நோயாளிகளும் இம்முறையில் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது உபகரணங்களை பெறுவதற்கும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சகம் கூறியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வருங்கால வைப்பு நிதியை எடுக்க நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சலுகை”

அதிகம் படித்தது