மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வருமான வரி சோதனைக்குப் பின் ராம மோகன் ராவ் பரபரப்பு பேட்டி



Dec 27, 2016

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின்படி கடந்த 21ந்தேதி முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீடு உட்பட 13இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதற்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டது. இச்சொதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

siragu-rama-mohana-rao

இதைத் தொடர்ந்து ராம மோகன் ராவ் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று(27.12.2016) அண்ணா நகரில் உள்ள ராம மோகன் ராவின் வீட்டில் காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். தலைமைச் செயலாளரின் அறையில் சோதனை நடந்தது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல் என்று கூறினார். என் பெயரில் சர்ச் வாரன்ட் இல்லாமல் இந்த சோதனை நடந்துள்ளது. மேலும் ஜெயலலிதாவால் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டேன், அவரால் பயிற்சி அழைக்கப்பட்டவன் நான் என ராம மோகன் ராவ் கூறியுள்ளார்.

எனக்கே இந்த கதி என்றால், அதிமுக தொண்டர்களின் கதி என்ன, மக்களின் கதி என்ன என்று கூறியுள்ளார். சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மேலும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சோதனை நடத்தப்பட்டதாகவும், எனவே என் உயிருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வருமான வரி சோதனைக்குப் பின் ராம மோகன் ராவ் பரபரப்பு பேட்டி”

அதிகம் படித்தது