மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று



Apr 19, 2017

கோடைகாலம் துவங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சென்ற மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. சில நாட்களாக தமிழகத்தில் அனல் காற்று வீசி வருகிறது.

Siragu meteorological

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. மேலும் பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை அனல் காற்று அதிகம் வீசுவதால் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்பக் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று”

அதிகம் படித்தது