மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு



May 17, 2017

தமிழகத்தில் மார்ச் மாதத் துவக்கத்திலிருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அநேக இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. எனவே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Siragu meteorological

அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

இன்று திருத்தணியில் 111 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது, பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. எனினும் சென்னையில் இன்று(17.05.17) காலையில் சாரல் மழை பெய்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு”

அதிகம் படித்தது