மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்



Mar 30, 2017

141 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இவ்வறட்சி காரணமாக ஏரிகள், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Siragu meteorological centreஇந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி, வேலூர் போன்ற இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இன்று சென்னையில் 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளை விட மகாராஷ்டிரம் மாநிலத்தில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அங்கு 116 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

அடுத்தக் வாரம் முதல் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெற்கு உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 100 பாரன்ஹீட் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்”

அதிகம் படித்தது