மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விரைவில் தமிழக நிரந்தர ஆளுநர் நியமனம்



Oct 14, 2016

தமிழகத்தில் நிரந்தர தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்படுவார் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

siragu-governer

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 31ந்தேதி முடிவடைந்த நிலையில் அப்பொறுப்பை மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.   இதையடுத்து செப்டம்பர் 2ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக முதல்வர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதையொட்டி நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து வித்யாசாகர் ராவ் நிரந்தர தமிழக ஆளுநராக நியமிக்கபடுவார் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விரைவில் தமிழக நிரந்தர ஆளுநர் நியமனம்”

அதிகம் படித்தது