மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு



Nov 16, 2016

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றுவதற்கும், அங்கீகாரம் இல்லாத அமைப்பில் உள்ள வீட்டுமனைகளை பதிவு செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் மனு அளித்திருந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகவும், அங்கீகாரம் இல்லாத அமைப்பில் உள்ள வீட்டுமனைகளையும் பத்திரப்பதிவுத்துறை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

siragu-land

இவ்வுத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் முன்பு அளித்த உத்தரவை மாற்ற முடியாது என்று அவ்வழக்கை நவம்பர் 16க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில் அரசு தெளிவான முடிவெடுக்கும் வரை விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விளைநிலங்கள் வீட்டுமனைகளாக பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு”

அதிகம் படித்தது