மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்கள் போராட்டம்



Mar 29, 2017

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-tamil-farmers2

எலிக்கறி தின்னும் போராட்டம், பாம்புக்கறி தின்னும் போராட்டம் போன்ற பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று(28.03.17) தஞ்சையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் செய்யும் மாணவர்களை கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாக வெளிவந்த தகவலால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இன்று காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 25மாணவர்களை கைது செய்தனர் காவல்துறையினர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்கள் போராட்டம்”

அதிகம் படித்தது