மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்



Mar 29, 2017

தமிழக விவசாயிகள் டெல்லியில் 16வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை, கோவை, திருச்சி போன்ற இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu students struggle

சமூக வலைதளங்களில் மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக கிடைத்த தகவலால் காவல் அதிகாரிகள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்விதமாக மெரினாவில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரினாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இளைஞர்களை கைது செய்தனர் காவல்துறையினர். மெரினா கடற்கரை பகுதிக்கு தடை விதித்துள்ளதால் மெரினா கடற்கரை சாலையிலேயே மாணவர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்”

அதிகம் படித்தது