மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் கோரிக்கை: பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்



Jan 10, 2017

வரலாறு காணாத வறட்சி தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தமிழக அரசு ஆய்வு செய்ய உத்தரவிட்டதையடுத்து, இன்று தமிழக முதல்வர் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார்.

siragu-farmer-suicide

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும், மேலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன் மத்தியக் கால கடனாக மாற்ற வழிவகை செய்யப்படும் போன்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்ததை வரவேற்ற விவசாயிகள், பயிர்கடனை மத்திய கடனாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலையில் பயிர்க்கடனை திருப்பி செலுத்தவோ அல்லது வட்டி கட்டவோ முடியாது. எனவே பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் கோரிக்கை: பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்”

அதிகம் படித்தது