மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் தற்கொலை குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்



May 3, 2017

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி இந்தியாவின் பல மாநிலங்களில் காணப்படுகிறது. இந்த வறட்சி காரணமாக 2013ம் ஆண்டு முதல் வருடத்திற்கு 12000 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.

Siragu farmer

விவசாயிகள் தற்கொலை குறித்த பொது நல வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் மத்திய அரசின் வழக்கறிஞர் பி.எஸ். நரசிம்மா விவசாயிகளுக்கு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை அறிவித்தார்.

அதிக விவசாயிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடைபெறுகிறது. இதைப் போக்க 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக நிர்ணயிக்கப்பட திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நரசிம்மா தெரிவித்தார்.

சென்ற 2015ம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை பட்டியலில் தமிழ்நாடு ஏழாவது இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 606 விவசாயிகள் 2015ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் தற்கொலை குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்”

அதிகம் படித்தது