மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் பிரச்சனை: உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம்



Apr 13, 2017

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 31 நாட்களாக பல வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

supreme-court

இப்போராட்டத்திற்கு பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்று(13.04.17) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சனைகள் மீது அக்கறை காட்டவில்லை, அவர்களுக்கு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று கூறியது. மேலும் இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் பிரச்சனை: உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம்”

அதிகம் படித்தது