மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் போராட்டம்: தமிழகத்தில் இன்று(03.04.17) பொது வேலை நிறுத்தம்



Apr 3, 2017

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையாக வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பயிர்கடங்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu Tamil-Nadu-bandh

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(03.04.17)தமிழ்நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதற்கு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி பேருந்து நிலையம் சுதேசி மில் அருகில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் போராட்டம்: தமிழகத்தில் இன்று(03.04.17) பொது வேலை நிறுத்தம்”

அதிகம் படித்தது