மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் போராட்டம்: தமிழகத்திலிருந்து 3000 விவசாயிகள் டெல்லி பயணம்



Mar 30, 2017

தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

17 நாட்களாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவ்வகையில் இன்று(30.03.17) வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராடும் விவசாயிகளுக்கு ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று(30.03.17) திருச்சி, சென்னை, கோவை, மதுரை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்து வருகிறார்கள் காவல்துறையினர். திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20விவசாயிகள் இன்று டெல்லி செல்கின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மூன்றாயிரம் விவசாயிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் போராட்டம்: தமிழகத்திலிருந்து 3000 விவசாயிகள் டெல்லி பயணம்”

அதிகம் படித்தது