மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஸ்டாலினின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு நாளை(22.02.17) விசாரணை



Feb 21, 2017

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்கட்சியான திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Siragu chennai highcourt

ஆனால் ரகசிய வாக்கெடுப்பை மறுத்தார் சபாநாயகர் தனபால். இதையடுத்து அங்கு கடும் அமளி ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் அதிகமானது. இதனால் திமுக உறுப்பினர்களை வெளியேற உத்தரவிட்டார் சபாநாயகர். தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளியேறினர். பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர்.

தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்டாலின். இந்த மனுவின் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஸ்டாலினின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு நாளை(22.02.17) விசாரணை”

அதிகம் படித்தது