மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஸ்டாலினின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 27ந்தேதிக்கு ஒத்திவைப்பு



Feb 22, 2017

பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Siragu stalin

ஆனால் ரகசிய வாக்கெடுப்பை நிராகரித்தார்சபாநாயகர் தனபால். இதையடுத்து அங்கு கடும் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்சபாநாயகர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளியேறினர். பின்நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றதாக அறிவித்தார் சபாநாயகர்.

தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கைவாக்கெடுப்புக்கு எதிராக சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்ஸ்டாலின்.

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான சபாநாயகர் முடிவு செல்லாது, தலைமை செயலர், கவர்னரின் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று(22.02.17) இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஸ்டாலினின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 27ந்தேதிக்கு ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது