மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: நெடுவாசல் அருகே உள்ள கிராம மக்கள் தொடர்போராட்டம்



Mar 21, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள்.

Siragu-neduvasal2

22 நாட்களாக போராட்டம் நடத்திய நெடுவாசல் போராட்டக்காரர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்கள் விருப்பத்திற்கு மாறாக இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தாது என்று உறுதி அளித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இதையடுத்து நெடுவாசலில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் வடகாடு, நல்லாண்டார்கொல்லை போன்ற பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நலாண்டார்கொல்லை பகுதியில் 32 வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகாடு பகுதியில் 16 நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: நெடுவாசல் அருகே உள்ள கிராம மக்கள் தொடர்போராட்டம்”

அதிகம் படித்தது