மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை விவசாயிகள் முழக்கம்



Mar 28, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தினர்.

Siragu-neduvasal2

விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும் செயல்படாது என்று தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த மாதம் 9ம் தேதி இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று(27.03.17)தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மத்திய அரசு. இதனால் நெடுவாசல் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் நெடுவாசல் மக்கள் நாளை முதல் போராட்டம் துவங்கும் என்று அறிவித்துள்ளனர்.

இன்று(28.03.17)புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை விவசாயிகள் முழக்கம்”

அதிகம் படித்தது