மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்: சென்னை மெரினாவில் தீவிர கண்காணிப்பு



Mar 28, 2017

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு நேற்று(27.03.17) கையெழுத்திட்டது. இதனையடுத்து நெடுவாசல் மக்கள் நாளை முதல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Siragu-merina-beach

இது தொடர்பான செய்திகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் சென்னை காவல் துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இளைஞர்கள் குவிந்தது போன்று, இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராடுவார்கள் என்று தகவல் கிடைத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் அச்சமடைந்துள்ளனர். எனவே சென்னை மெரீனா கடற்கரையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்: சென்னை மெரினாவில் தீவிர கண்காணிப்பு”

அதிகம் படித்தது