மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டம்: வயலில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர் நாகை விவசாயிகள்



Mar 30, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 22 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.

Siragu-neduvaasal1

இத்திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படாது என்று மத்திய, மாநில அரசு கேட்டுக்கொண்டதால் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது.

நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் மீண்டும் துவங்குவது பற்றி ஆலோசனை செய்து வருகிறார்கள். இத்திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளை என்ற பகுதியில் உள்ள விவசாயிகள் வயலில் கருப்புக்கொடி கட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்றிவிடுவதாக தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டம்: வயலில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர் நாகை விவசாயிகள்”

அதிகம் படித்தது