மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

10 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை



Mar 21, 2017

கச்சத்தீவு அருகே பழுது காரணமாக நின்ற ஜஸ்டின் என்பவரது படகில் இருந்த 10ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றது இலங்கை கடற்படை.

Siragu fishermen- murder2

மீனவர்களை கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர் இலங்கைக் கடற்படையினர். இந்த கைது தமிழக மீனவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இலங்கைக் கடற்படையினால் பிரிட்ஜோ என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக போராட்டங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக மீனவர்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே 10 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “10 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை”

அதிகம் படித்தது