மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

1000 ரூபாய் நோட்டு தற்போதைக்கு இல்லை



Nov 17, 2016

நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. 4500 ரூபாய் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளை முதல் 4500 ரூபாயை 2000 ரூபாயாக குறைத்துள்ளது.

siragu-arun-jaitley

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் எனவும், 1000 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போதைக்கு 1000 ரூபாய் நோட்டு வெளியிடுவதாக திட்டம் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். பணம் மாற்றுவதற்கு கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் பணம் முறைகேடாக பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “1000 ரூபாய் நோட்டு தற்போதைக்கு இல்லை”

அதிகம் படித்தது