மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

16ம் தேதி கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு



Mar 14, 2017

கோவா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றிபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், கோவாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியது.

supreme-court

இதையடுத்து கோவா ஆளுநர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசை பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் எந்த கட்சி ஆட்சியமைக்க அழைப்பது என்ற அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வரும் 16ம் தேதி கோவா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் தற்காலிக சபாநாயகரை உச்சநீதிமன்றமே நியமிக்கும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “16ம் தேதி கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு”

அதிகம் படித்தது