மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

+2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விலக்கு



Apr 10, 2017

ஏப்ரல் 5ம் தேதி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பமாகியிருக்கிறது. இத்திருத்தும் பணியில் இருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் 24 விடைத்தாள்களை திருத்த வேண்டும் என்று உள்ளது. அதாவது காலை 12 விடைத்தாள்களும், மதியத்திற்கு மேல் 12 விடைத்தாள்களும் திருத்த வேண்டும் என்பது வழக்கம். இது சிரமமாக இருக்கிறது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Siragu exam

தினமும் 200 மதிப்பெண்கள் கொண்ட 24 விடைத்தாள்களை அவசரமாக திருத்துவதால் பணிச்சுமை அதிகமாகக் காணப்படுகிறது, மேலும் உரிய முறையில் விடை மதிப்பீடு செய்ய முடிவதில்லை என்று ஆசிரியர்கள் கூறியிருந்தனர்.

தினமும் 24 விடைத்தாள்களுக்குப் பதில் 20 ஆகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்வு மற்றும் கல்வித்துறையிடம் வலியுறுத்தி வந்தது தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்.

இதனையடுத்து இந்த ஆண்டு 24 விடைத்தாள்களிலிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காலையில் 10 விடைத்தாளும், மதியத்திற்கு மேல் 10 விடைத்தாளும் திருத்தினால் போதும் என்று ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்.

இதில் உயிரியல் விடைத்தாள்கள் காலை8ம், மதியத்திற்குப் பிறகு 8 என்று 14 விடைத்தாள்கள் திருத்தலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களே அதே கல்வி மாவட்டத்தில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றவும் அனுமதி அளித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “+2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விலக்கு”

அதிகம் படித்தது