மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

20-வது நாளாக நடைபெறும் நெடுவாசல் போராட்டம்



Mar 7, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 20-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் மனித சங்கிலி, கும்மியடித்து போராட்டம் போன்ற பல வடிவங்களில் நடைபெற்று வருகிறது.

Siragu neduvasal

விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்ற இரண்டு நாட்களாக நன்றாக மழை பெய்தபொழுதும் நெடுவாசல் போராட்டக்காரர்கள் அசையாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெடுவாசலுக்கு அருகே உள்ள வடகாடு கிராம மக்களும் மூன்று நாட்களாக போராடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரி மாணவர்களும் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “20-வது நாளாக நடைபெறும் நெடுவாசல் போராட்டம்”

அதிகம் படித்தது