சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

21ம் திருத்தச்சட்டம் எனும் அடுத்த பூச்சாண்டி!

ராஜ் குணநாயகம்

Jun 18, 2022

siragu urimaip poraattam1
21ம் திருத்தச்சட்ட மைனஸ், பிளஸ் என்பதுவும் ஶ்ரீலங்காவில் தற்போதய அரசியல் மற்றும் பொருளாதார வங்குரோத்து நிலைக்கெதிராக நடைபெற்றுவருகின்ற மக்கள் போராட்டங்களை திசைதிருப்புவதற்கான ஒரு பூச்சாண்டிதான்.

மக்கள் வடக்கு நோக்கி போவதற்கான திசையை கேட்டால் இந்த அரசியல் ஏமாற்றுக்காரர்கள் காட்டும் திசையோ தெற்கு நோக்கியதாக இருக்கின்றது.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் 13 பிளஸ், மைனஸ் என்று தமிழர்களை ஏமாற்றியவர்கள் 18,19,20 மற்றும் 21 மைனஸ், பிளஸ் என்று தென்னிலங்கை மக்களையும் ஒட்டுமொத்த இலங்கையரையும் மூடர்களாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்-ஒன்றும் உருப்படியாய் நிகழப்போவதில்லை!

பி.கு:19ம் திருத்தச்சட்டத்தை கொண்டுவந்த “நல்லாட்சி” (திரு. ரணில் அவர்கள் பிரதம மந்திரி, திரு.மைத்திரி அவர்கள் சனாதிபதியாகவும் இருந்தனர்) என்று சொல்லப்பட்ட ஆட்சியில்தான்

1.ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது- உண்மை கண்டறியப்படவேண்டும் என ஐ.நா வரை முறைப்பாடு சென்றுள்ளது.
2.முன்னைய ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கெதிராக முன்னாள் நிதி அமைச்சர் உட்பட பலருகலகெதிராக பல கண்துடைப்பு வழக்குகள் நடைபெற்றது
3.”அவன்கார்ட்” மிதக்கும் ஆயுதக்கப்பல் தொடர்பான கண்துடைப்பு வழக்கு நடைபெற்றது
4.மத்திய வங்கி ஆளுநரின் பிணைமுறி மோசடி
5. திரு. ரணில் மற்றும் திரு.மைத்திரிக்குமிடையில் அதிகாரத்திற்கான குடுமிச்சண்டை கடைசியில் இடைநடுவிலேயே ஆட்சியும் கவிழ்ந்தது

21ம் திருத்தச்சட்டம் எனும் அடுத்த பூச்சாண்டி!

ஈழன்.


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “21ம் திருத்தச்சட்டம் எனும் அடுத்த பூச்சாண்டி!”

அதிகம் படித்தது