மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

21-வது நாளாக நெடுவாசலிலும், 4-வது நாளாக வடகாட்டிலும் போராட்டம்



Mar 8, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 21-வது நாளாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நெடுவாசல் அருகில் உள்ள வடகாடு என்ற கிராமத்திலும் இத்திட்டத்திற்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-neduvasal2

பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வரும் இப்போராட்டம் இன்று கலைஞர்கள் கோலாட்டம் ஆடி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பை பாடலின் மூலம் பாடி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாடல்கள் பாடி, அதற்கு கலைஞர்கள் கோலாட்டம் ஆடி போராட்டம் நடத்தினர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “21-வது நாளாக நெடுவாசலிலும், 4-வது நாளாக வடகாட்டிலும் போராட்டம்”

அதிகம் படித்தது