மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

3 தீவிரவாதிகள் கைதானதைத் தொடர்ந்து மேலும் இரண்டு தீவிரவாதிகள் மதுரையில் கைதுNov 29, 2016

சில மாதங்களுக்கு முன்பு மைசூர் நீதிமன்ற வளாகத்தின் வெளியே நடந்த குண்டு வெடிப்பை தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மைசூரில் நடந்த குண்டு வெடிப்புக்கும், அதற்கு முன்பு ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் நகர நீதிமன்றங்களின் அருகே நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

siragu-news-militants

இவ்வழக்கு தொடர்பாக நேற்று மூன்று தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு தீவிரவாதிகளை இன்று மதுரையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூர் அழைத்துவரப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “3 தீவிரவாதிகள் கைதானதைத் தொடர்ந்து மேலும் இரண்டு தீவிரவாதிகள் மதுரையில் கைது”

அதிகம் படித்தது