30வது நாளாக விவசாயிகள் போராட்டம்
Apr 12, 2017
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி, பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள்டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 30 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
எலிக்கறி தின்னும் போராட்டம், பாம்புக்கறி தின்னும் போராட்டம், மண் சோறு சாப்பிடும் போராட்டம் என நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் வகையில் 30 வது நாளான இன்று(12.04.17) தங்களது கோரிக்கைகளை உடம்பில் எழுதி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராடும் விவசாயிகளுக்காக, சென்னை அம்பத்தூரில் சவம்போல் படுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு காவல்துறை மறுத்ததால் அங்கே பதற்றம் ஏற்பட்டது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “30வது நாளாக விவசாயிகள் போராட்டம்”