மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

33-வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் தாலி அறுக்கும் போராட்டம் நடத்தினர்



Apr 15, 2017

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறர்கள்.

Siragu farmer

33 நாட்களாக நடைபெறும் இப்போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகளை இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் இப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

அவ்வகையில் நேற்று(14.04.17) சேலை அணிந்து தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று(15.04.17) சேலை அணிந்த ஆண் விவசாயிகள் தாலி அறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சேலை அணிந்த விவசாயிகள் தாலியும் அணிந்து அதனை அறுத்தும், சுற்றியுள்ள விவசாயிகள் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “33-வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் தாலி அறுக்கும் போராட்டம் நடத்தினர்”

அதிகம் படித்தது