மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

5 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கைக் கடற்படை



Feb 2, 2017

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படை அந்தப் பகுதிக்கு வந்து, அங்கு இருந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தது.

siragu-tamil-fisherman

கைது செய்யப்பட ஐந்து மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

ஐந்து மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் சிறையில் உள்ள நிலையில் இந்த ஐந்து மீனவர்களையும் கைது செய்துள்ளது மீனவர்களிடம் வருத்தத்தை அளிக்கிறது.

இதயனடுத்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் மீனவர்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “5 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கைக் கடற்படை”

அதிகம் படித்தது