500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறது
Nov 23, 2016
ரூபாய் 500, 1000 நோட்டுக்களை திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்கட்சிகள் இன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை தொடங்கிய இப்போராட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், திமுக, அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.கள் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், குலாம் நபி ஆசாத், நவநீத கிருஷ்ணன், திருச்சி சிவா, கனிமொழி உள்பட 12 கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி.க்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டு வருகின்றனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமை தாங்க உள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறது”