மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

52 பேர் மீது வழக்கு பதிவு: முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தியை பரப்புவோருக்கு எச்சரிக்கை



Oct 12, 2016

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்ற செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

siragu-jeyalalitha1

இதற்கிடையில் முதல்வர் உடல்நிலைபற்றி வதந்திகள் பல பரவி வருகிறது. நேற்று முன்தினம் 2 பேர்கள் முதல்வர் உடல்நிலையைப் பற்றிய வதந்தி பரப்பி வந்ததாக கைது செய்யப்பட்டனர். அதனால் போலீசார் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து வந்துள்ளனர்.

மேலும் இன்று வரை முதல்வர் உடல்நிலை பற்றியான வதந்திகள் பரப்பி வந்ததாக 52 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் முதல்வர் உடல்நிலை பற்றியான வதந்திகள் பரப்பி வருவோருக்கும் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “52 பேர் மீது வழக்கு பதிவு: முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தியை பரப்புவோருக்கு எச்சரிக்கை”

அதிகம் படித்தது