மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

6-வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்புNov 23, 2016

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சென்ற நவம்பர் 16ம் தேதி துவங்கியது. துவங்கிய நாள் முதல், ரூபாய் நோட்டு வாபஸ் விவாகரத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

siragu-parliament

இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணியளவில் கூடியது. இரு அவைகளிலும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் படும் சிரமத்திற்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்றும், இப்பிரச்சினைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வந்தனர்.

தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்படும் நிலையில் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின் 12 மணிக்கு துவங்கிய பின்னும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை தொடர்ந்தால் இந்த கூட்டத்தொடரே முடங்கும் அபாயம் உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “6-வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது