மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

7- வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்புNov 24, 2016

நவம்பர் 9ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சென்ற நவம்பர் 16ம் தேதி துவங்கியது. துவங்கிய நாள் முதல், ரூபாய் நோட்டு வாபஸ் விவாகரத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

siragu-parliament

இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணியளவில் கூடியது. இரு அவைகளிலும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் படும் சிரமத்திற்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி வந்தனர்.தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்படும் நிலையில் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின் 12 மணிக்கு துவங்கும்பொழுது மோடி வருகை தந்தார். எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கான விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது. பின் உணவு இடைவேளைக்குப் பின் அவைக்கு மோடி வராததால் அவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அதனால் 7- வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “7- வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது