மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

7-வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்



Mar 20, 2017

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் ஏழாவது நாட்களாக தொடர்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் தங்களதுகோரிக்கைகளாக விவசாய கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்டவையை முன்வைக்கின்றனர்.

Siragu-farmers

கைகளில் மண்டையோடு, மண்சட்டி வைத்துப்போராடுவது, அரைநிர்வாணமாக போராட்டம் நடத்துவது என்று நூதன முறையில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

உயிர் போகும் வரை போராட்டத்தைக்கைவிடுவதில்லை என்று அங்கு போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழக நதிநீர் இணைப்பு விவசாயிகள் நல சங்க தலைவரான அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளை திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற திமுக எம்.பி-க்கள் கடந்த வாரம் சந்தித்தனர். இந்நிலையில் இன்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை போராட்டம் நடத்தும் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார். விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன் போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டத்தைக் கைவிடுவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “7-வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது