84 மக்கள் நலத் திட்டங்கள் ஆதார் எண்ணுடன் இணைப்பு
Mar 6, 2017
மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தின் கீழ் 48 மக்கள் நலத் திட்டங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதிய உணவு திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்கள், தங்களது ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுவரை ஐந்து முதல் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் எழுபது சதவிகிதம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டது.
மீதம் உள்ள குழந்தைகளும் ஜூன் 30 க்குள் பள்ளிகளில் ஆதார் எண் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெறுவதில் மானியம் பெறுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி, பிற்படுத்தப்பட்டோர் நல வாழ்வு மையங்கள், மது அடிமைகள் மறுவாழ்வு மையம், முதியோர் காப்பகங்கள் போன்ற இடங்களிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “84 மக்கள் நலத் திட்டங்கள் ஆதார் எண்ணுடன் இணைப்பு”