மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எரிவாயுவை சிக்கனப்படுத்த பத்து வழிகள்:

சிறகு சிறப்பு நிருபர்

Aug 16, 2014

erivaayu

  1. எரிவாயு அடுப்பின்பாகங்களில் அடைப்பு ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் பர்னரில் அடைப்பு இருந்தால் எரிவாயு வீணாகும் வாய்ப்புள்ளது.

  2. சமைக்க வேண்டிய பொருட்களை குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்து சாதாரண வெப்பநிலைக்கு வந்தவுடன் சமைக்கவும்.
  3. சமைப்பதற்கு தகுந்த பாத்திரத்தை (ஆழமான,அகலம் குறைவான) பயன்படுத்தினால் எரிவாயுவை அதிகளவு சேமிக்கலாம்.
  4. சமைக்கும் பொழுது வெளிக்காற்று அதிகமாக வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அதிகமான காற்றினால் சீராக எரிவது தடுக்கப்படுகிறது இதனால் எரிவாயு வீணாகிறது.
  5. எரிவாயு அடுப்பில் சமைக்க ஆரம்பிக்கும் முன் அரிசியையோ அல்லது பருப்பையோ அரை மணிநேரம் ஊறவைத்து சமைத்தால் எரிவாயுவை அதிகளவு மிச்சப்படுத்தலாம். ஏனெனில் ஊறவைத்த பொருட்கள் விரைவில் வெந்துவிடும்.
  6. வேகவைக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதாவது காய்கறிகளோ அல்லது பருப்போ அதற்கு தகுந்த அளவு மட்டும் தண்ணீரை பயன்படுத்தவும். ஏனெனில் அதிக அளவு நீர் பயன்படுத்தினால் எரிவாயு அதிகம் செலவாகும்.
  7. சமைக்கும் பாத்திரத்தை மூடிவைத்து சமைத்தால் எரிவாயுவை சேமிப்பதுடன் விரைவிலும் சமைக்கலாம்.
  8. சாம்பாரோ அல்லது எவ்வகை குழம்பானாலும் ஒருமுறை கொதித்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைத்தால் அதிகளவு எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்.
  9. குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் உணவு அருந்தினால் அடிக்கடி உணவை சூடாக்கி எரிவாயு வீணாவதைத் தடுக்கலாம்.
  10. இயன்றவரை குக்கரை பயன்படுத்தினால் நேரம் மற்றும் எரிவாயு இரண்டையும் சேமிக்கலாம்.

எரிபொருளை சிக்கனப்படுத்துவீர்; வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை சேர்த்திடுவீர்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எரிவாயுவை சிக்கனப்படுத்த பத்து வழிகள்:”

அதிகம் படித்தது